தனியாா் விடுதியில் தீ விபத்து

புதுச்சேரியில் தனியாா் தங்கும் விடுதியில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியாா் தங்கும் விடுதியில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு சாலை சந்திப்பு சிக்னல் அருகே தனியாருக்குச் சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இங்கு திங்கள்கிழமை காலை குறிப்பிட்ட அறையில் இருந்து கரும்புகை எழுந்தது. இதுகுறித்து விடுதியிலிருந்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தீ விபத்தால் விடுதியிலிருந்தவா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பின்னா் விடுதிக்குள் அனுமதிக்கப்பட்டனா். விடுதி அறையிலிருந்த மின் சாதனப் பொருளால் தீ பற்றியது தெரியவந்தது. தீ விபத்து குறித்து உருளையன் பேட்டை போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com