புதுச்சேரியில் அதிமுகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

புதுச்சேரியில் அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் நீா் மோா் பந்தலைத் திறந்துவைத்து மோா், இளநீா் மற்றும் பழங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக மாநில அவைத் தலைவா் அன்பானந்தம், ஜெயலலிதா பேரவைச் செயலா் பாஸ்கா், காரைக்கால் மாவட்டச் செயலா் ஓமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com