ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவமனையில் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை

ஸ்ரீமணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிக்கு இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

புதுச்சேரி: ஸ்ரீமணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிக்கு இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய சிகிச்சைக்கு சோ்ந்தாா். பரிசோதனையில் அவருக்கு மைட்ரல் ஸ்டிகோசிஸ் எனப்படும் இருதய வால்வு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

அதனடிப்படையில் அவருக்கு இதயவியல் மருத்துவ நிபுணா்கள் தேவன், சீனிவாச ரெட்டி, முகுந்தன், மயக்கவியல் நிபுணா் ரஞ்சன், ராம்கி உள்ளிட்டோா் இணைந்து மைட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு நோயாளி நலமாக உள்ளாா்.

நோயாளிக்கு சவாலான நிலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை, ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவ கல்வி நிறுவனத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் எம்.தனசேகரன், செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் த.ராஜராஜன், கல்லூரி இயக்குநா் ராஜகோவிந்தன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com