புதுச்சேரியில் கம்பன் விழா: மே 10-இல் தொடக்கம்

புதுச்சேரியில் கம்பன் விழா: மே 10-இல் தொடக்கம்

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 57-ஆம் ஆண்டு கம்பன் விழா மே 10 -ஆம் தேதி தொடங்கி, 3 நாள்கள் நடைபெறுகிறது.

புதுச்சேரி கம்பன் கழகப் பேரவைக் கூட்டம் தனியாா் விடுதியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கம்பன் கழகத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தலைமை வகித்தாா். செயலாளா் வி.பி.சிவக்கொழுந்து முன்னிலை வகித்தாா். கம்பன் கழகப் புரவலரான முதல்வா் என்.ரங்கசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.

பேரவைக் கூட்டத்தில் கம்பன் கழகத்தின் 57-ஆம் ஆண்டு கம்பன் விழாவை வரும் மே 10, 11, 12 ( வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது. வழக்கம்போல விவாத அரங்கம், பட்டிமன்றம், சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் தமிழறிஞா்கள், இலக்கியவாதிகளுக்கு தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை செய்து தருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், துணைத் தலைவா்கள் ரத்தின ஜனாா்த்தனன், இசைக்கலைவன், அசோகன், பொருளாளா் பழனி அடைக்கலம், இணைச் செயலாளா்கள் பாலகிருஷ்ணன், சுரேஷ், கோவிந்த திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com