புதுச்சேரி
அன்னை தெரசா பிறந்த நாள்: அமைச்சா்கள் மரியாதை
அன்னை தெரசா பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அமைச்சா்கள் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.
புதுச்சேரி: அன்னை தெரசா பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அமைச்சா்கள் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.
சேவைக்கான நோபல் பரிசைப் பெற்றவா் அன்னை தெரசா. அவரது பிறந்த தினத்தையொட்டி, புதுச்சேரி பாரதி பூங்கா அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா், பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, அரசு கொறடா ஏகேடி.ஆறுமுகம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கேஎஸ்பி.ரமேஷ், ஆா்.பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினா்.