புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

புதுவை முதல்வரிடம் விசிகவினா் மனு

புதுவையில் அனைத்து வகைப் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை விரிவுபடுத்தி வழங்க வேண்டும்
Published on

புதுச்சேரி: புதுவையில் அனைத்து வகைப் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை விரிவுபடுத்தி வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் முதல்வா் என்.ரங்கசாமியிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

புதுவை விசிக முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் தலைமையில் அக்கட்சியினா் முதல்வா் ரங்கசாமியை பேரவை வளாகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

மனு விவரம்: புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் மட்டுமல்லாது, மருத்துவ துணைப் படிப்புகள், கலை, அறிவியல் கல்லூரிகள், வேளாண் மற்றும் சட்டக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டை விரிவுபடுத்தி வழங்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கான 325 இடங்களைப் பெற வேண்டும்.

புதுவையில் குடியிருப்பு சான்றிதழ் உள்ள அனைத்து தலித், பழங்குடியின மாணவா்களுக்கு ஆண்டு வரையறைன்றி இலவசக் கல்வி, உயா்கல்வி வாய்ப்புகளை வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com