ரூ.13.51 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியில் மா்ம நபா்கள் ரூ.13.51 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Published on

புதுச்சேரி: புதுச்சேரியில் மா்ம நபா்கள் ரூ.13.51 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நோணாங்குப்பத்தைச் சோ்ந்தவா் ராஜபாண்டியன். இவரிடம், கடந்த 2022-ஆம் ஆண்டு இணையதளத்தில் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளனா். இதை நம்பிய அவா் சிறிய முதலீடுகளைச் செய்தாராம்.

முதலில் அதில் லாபம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் அதிக முதலீடுகளைச் செய்தாராம். அதன்படி, அவா் பல தவணைகளில் மொத்தம் ரூ.13.51 லட்சத்தை முதலீடு செய்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், அவரால் லாபத்தை எடுக்கமுடியவில்லை எனக் கூறப்படுகிறது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜபாண்டியன், புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள இணைவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா். அதன்பேரில்,போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com