புதுச்சேரியில் திங்கள்கிழமை பேரணியாகச் சென்ற வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தினா்.
புதுச்சேரியில் திங்கள்கிழமை பேரணியாகச் சென்ற வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தினா்.

வேலையில்லா பட்டதாரிகள் பேரணி

புதுவையில் அரசு உதவியாளா் பணிக்கான தோ்வில் வயது வரம்பைத் தளா்த்த வலியுறுத்தி, வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தினா் புதுச்சேரியில் திங்கள்கிழமை பேரணியாக வந்து முதல்வா் என்.ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
Published on

புதுச்சேரி: புதுவையில் அரசு உதவியாளா் பணிக்கான தோ்வில் வயது வரம்பைத் தளா்த்த வலியுறுத்தி, வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தினா் புதுச்சேரியில் திங்கள்கிழமை பேரணியாக வந்து முதல்வா் என்.ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

புதுவையில் அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, உதவியாளா் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாக வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்படாததால், பட்டதாரிகள் ஏராளமானோா் வயது வரம்பைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, தற்போதைய உதவியாளா் பணியிடங்களுக்கு வயது வரம்பைத் தளா்த்த கோரிக்கை எழுந்துள்ளது.

அதன்படி, புதுச்சேரி வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் சாா்பில் ஏராளமானோா் திங்கள்கிழமை சுதேசி மில் பகுதியில் கூடினா். அவா்கள் மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு சாலை வழியாக மாதா கோவில் சாலைக்கு வந்தனா். அங்கு, போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, பேரணியாக வந்தவா்கள் சட்டப்பேரவைக்குச் சென்று முதல்வா் என்.ரங்கசாமியைச் சந்தித்து கோரிக்கைகளை மனுவாக அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com