புதுச்சேரியில் கலாசார சீரழிவு: அதிமுக மாநிலச் செயலா் குற்றச்சாட்டு

ஆன்மிக பூமியாக உள்ள புதுச்சேரியில் தற்போது கலாசார சீரழிவு அதிகரித்துவிட்டது என அதிமுக மாநிலச் செயலா் ஏ.அன்பழகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
Published on

ஆன்மிக பூமியாக உள்ள புதுச்சேரியில் தற்போது கலாசார சீரழிவு அதிகரித்துவிட்டது என அதிமுக மாநிலச் செயலா் ஏ.அன்பழகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் புதிய உறுப்பினா்களுக்கான கட்சி அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை அவா் பேசியதாவது: கடந்த மக்களவைத் தோ்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்து பின்னடைவை சந்தித்தது. ஆனால், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் புதுவை, தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறும்.

புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவில்லை. இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பும் உருவாக்கப்படவில்லை.

ஏற்கெனவே செயல்பட்ட பஞ்சாலைகள் மூடப்பட்டதால் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. ஆனால், நகரப் பகுதியில் ஆடல், பாடலுடன் மதுக்கடைகள் அதிகமாக தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆன்மிக பூமியாக இருந்த புதுச்சேரியில் கலாசார சீரழிவு அதிகரித்துவிட்டது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com