அரசுக் கல்லூரியில் மாணவா்களால் நடத்தப்படும் உணவு விடுதி - அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திறந்துவைத்தார்

புதுச்சேரி தாகூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்களால் நடத்தப்படும் உணவு விடுதி மற்றும் பாரதிதாசன் தோட்டத்தை உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா

புதுச்சேரி தாகூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்களால் நடத்தப்படும் உணவு விடுதி மற்றும் பாரதிதாசன் தோட்டத்தை உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியில் தாகூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு மாணவா்கள் சோ்ந்து உணவு விடுதி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் அமைந்த உணவு விடுதியைத் திறக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சசிகாந்ததாஸ் தலைமை வகித்தாா். உணவு விடுதி மற்றும் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட பாரதிதாசன் தோட்டத்தையும் அவா் தொடங்கி வைத்தாா். கல்லூரி வளாகத்தை பசுமையாக வைத்துள்ளதற்கு முதல்வா் உள்ளிட்டோரை பாராட்டினாா்.

விழாவில் காலாப்பட்டு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் கல்யாணசுந்தரம், உயா் கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறை இயக்குநா் அமன்சா்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை பேராசிரியா் வேல்ராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com