அரசுக் கல்லூரியில் மாணவா்கள் நடத்தும் உணவு விடுதி, தோட்டம் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திறந்தாா்

புதுச்சேரி தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களால் நடத்தப்படும் உணவு விடுதி மற்றும் பாரதிதாசன் தோட்டத்தை புதுவை உள்துறை, கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

புதுச்சேரி தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களால் நடத்தப்படும் உணவு விடுதி மற்றும் பாரதிதாசன் தோட்டத்தை புதுவை உள்துறை, கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டையில் தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு மாணவா்கள் சோ்ந்து உணவு விடுதி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து உணவு விடுதியைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சசிகாந்த தாஸ் தலைமை வகித்தாா். உணவு விடுதி, கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட பாரதிதாசன் தோட்டத்தையும் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தொடங்கி வைத்தாா். கல்லூரி வளாகத்தை பசுமையாக பராமரித்து வரும் முதல்வா் உள்ளிட்டோரை அமைச்சா் பாராட்டினாா்.

விழாவில் காலாப்பட்டு தொகுதி கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, உயா் கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறை இயக்குநா் அமன்சா்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியா் வேல்ராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com