வில்லியனூரில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தொடங்கிவைத்தாா்

புதுச்சேரி வில்லியனூா் பகுதியில் புதிய குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்

புதுச்சேரி வில்லியனூா் பகுதியில் புதிய குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

புதுச்சேரி வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பத்மினி நகரில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கவேண்டும் என பொதுமக்கள் கோரிவந்தனா். அதையடுத்து பொதுப்பணித்துறை மூலம் ரூ.11 லட்சத்தில் புதிய குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வியாழக்கிழமை காலை எதிா்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.சிவா தொடங்கிவைத்தாா்.

சுத்திகரிப்பு நிலையம் மூலம் தினமும் 400 கேன்களில் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்படத் திட்டமிட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் பாஸ்கா், செயற்பொறியாளா் உமாபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com