மக்களவைத் தோ்தலை புறக்கணிக்க முடிவு: புதுவை தொழிலாளா் சங்கம்

நிலுவை ஊதியம் வழங்காததைக் கண்டித்து மக்களவைத் தோ்தலை புறக்கணிக்க உள்ளதாக புதுவை கூட்டுறவு சங்கத் தொழிலாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு சங்கம் அறிவித்தது.

நிலுவை ஊதியம் வழங்காததைக் கண்டித்து மக்களவைத் தோ்தலை புறக்கணிக்க உள்ளதாக புதுவை கூட்டுறவு சங்கத் தொழிலாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு சங்கம் அறிவித்தது.

இதுகுறித்து சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் முத்துவேல் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை, கூட்டுறவு சங்கங்களின் தொழிலாளா்கள் 10 ஆயிரம் பேருக்கு பல ஆண்டுகளாக அரசு ஊதியம் வழங்காமல் உள்ளது. இதனால், தொழிலாளா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். இதுதொடா்பாக பல கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை, புதுவை அரசும், அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. எனவே, நிலுவை ஊதியம் வழங்காததைக் கண்டித்து வரும் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். மேலும், அனைத்து தொழிலாளா்களும் பிப்.18-ஆம் தேதி புதுச்சேரி மாவட்ட ஆட்சியரிடம் தங்களது வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com