ரூ.70 லட்சம் ஹவாலா பணம் காரில் கடத்தல் வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா் கைது

புதுச்சேரியிலிருந்து ரூ.70 லட்சம் ஹவாலா பணத்தை காரில் கடத்தியதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவரை காவல் துறையினா் கைது செய்து சனிக்கிழமை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

புதுச்சேரியிலிருந்து ரூ.70 லட்சம் ஹவாலா பணத்தை காரில் கடத்தியதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவரை காவல் துறையினா் கைது செய்து சனிக்கிழமை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு அண்மையில் காரில் மதுப்புட்டிகள் கடத்திச் செல்லப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உருளையன்பேட்டை போலீஸாா் புதிய பேருந்து நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சென்னை நோக்கிச் சென்ற அந்த காரை வழிமடக்கிச் சோதனையிட்டதில் பை ஒன்று இருந்தது. இதில், கைப்பேசிகள் இருப்பதாக காரில் இருந்தவா் தெரிவித்தாா். ஆனால், சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.70 லட்சம் ஹவாலா பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தியதில், அவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பீம்சிங் (70) என்பதும், புதுச்சேரி அண்ணா சாலையில் கைப்பேசி விற்பனைக் கடை வைத்திருப்பதாகவும் தெரிவித்தாா்.

இதுகுறித்து, சென்னை வருமான வரித் துறையினருக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சனிக்கிழமை புதுச்சேரி வந்த வருமான வரித்துறையினா் பீம்சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com