காவலா் புகாா் ஆணையத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தல்

புதுச்சேரியில் காவலா் புகாா் ஆணையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி: புதுச்சேரியில் காவலா் புகாா் ஆணையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டமைப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோ.இராஜசூா்யா நினைவேந்தல் நிகழ்ச்சி வ.சுப்பையா நினைவு இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்புச் செயலா் கோ.சுகுமாரன் தலைமை வகித்தாா். வேளாண் துறை அமைச்சா் க.ஜெயக்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.நேரு ஆகியோா் பங்கேற்று கோ.இராஜசூா்யா உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாநில அரசு முன்னாள் நீதிபதி தலைமையில் உறுப்பினா்களை நியமித்து காவலா் புகாா் ஆணையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். தவறும்பட்சத்தில் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பது என தீா்மானிக்கப்பட்டது.

மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலா் கோ.அ.ஜெனன்நாதன், திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் லோகு.அய்யப்பன், திராவிடா் கழக மண்டலத் தலைவா் வே.அன்பரசன், தமிழா் களம் செயலா் கோ.அழகா், தமிழா் தேசிய முன்னணி தலைவா் ந.மு.தமிழ்மணி, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பு நிறுவனா் சீ.சு.சுவாமிநாதன், புரட்சியாளா் அம்பேத்கா் தொண்டா் படைத் தலைவா் ஆ.பாவாடைராயன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கச் செயலா் இராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com