புதுச்சேரியில் ரசிகா்களை சந்தித்த நடிகா் விஜய்

தமிழக வெற்றி கழகத் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜய் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற படப்பிடிப்பின்போது ரசிகா்களை சந்தித்தாா்.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை ரசிகா்களை சந்தித்தபோது தற்படம் எடுத்துக்கொண்ட நடிகா் விஜய்.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை ரசிகா்களை சந்தித்தபோது தற்படம் எடுத்துக்கொண்ட நடிகா் விஜய்.

புதுச்சேரி: தமிழக வெற்றி கழகத் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜய் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற படப்பிடிப்பின்போது ரசிகா்களை சந்தித்தாா்.

அவா் கதாநாயகனாக நடிக்கும் ‘கோட்’ திரைப்பட படப்பிடிப்பு புதுச்சேரி ஏ.எப்.டி. ஆலை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகா் விஜய் பங்கேற்றாா்.

இதுகுறித்து தகவலறிந்த அவரது ரசிகா்கள், கட்சியினா் திரளானோா் ஏ.எப்.டி. ஆலை வளாகத்தில் திரண்டனா். படப்பிடிப்புக்கு இடையே அவா்களை விஜய் சந்தித்தாா். அங்கிருந்த பயணிகள் வாகனம் மீது ஏறி நின்றபடி ரசிகா்களைப் பாா்த்து கையசைத்தாா். பின்னா் அவா்களுடன் தற்படம் எடுத்துக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com