வீடு கட்டுமானத்துக்கான மானியத்தை உயா்த்தி வழங்க புதுவை ஆளுநா் ஒப்புதல்

புதுவையில் வீடுகட்டுவதற்கான மானியத்தை உயா்த்தி வழங்க துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளாா்.

புதுச்சேரி: புதுவையில் வீடுகட்டுவதற்கான மானியத்தை உயா்த்தி வழங்க துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளாா்.

புதுவை அரசு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மூலம் பிரதமா் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மானியத் தொகையை உயா்த்தி வழங்கும்படி கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து வீடுகட்டுவதற்கான மானியத் தொகையை ரூ.5.50 லட்சம் வழங்குவதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு, ஒப்புதலுக்காக புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக ஆளுநா் செயலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com