இருளா் சமுதாய மக்களுக்குஇலவச மனைப்பட்டா

புதுச்சேரி மணவெளி தொகுதியில் இருளா் சமுதாய மக்களுக்கு இலவச மனைப்பட்டா திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

புதுச்சேரி: புதுச்சேரி மணவெளி தொகுதியில் இருளா் சமுதாய மக்களுக்கு இலவச மனைப்பட்டா திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

புதுச்சேரி மணவெளி சட்டப் பேரவைத் தொகுதியில் இருளா் சமுதாயத்தினா் வசிக்கின்றனா். இவா்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, இருளா் சமுதாய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டன. ஆனால், பட்டா வழங்கப்பட்டதில், ஏராளமானோா் விடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், தவளக்குப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை மூலம் பட்டா வழங்கப்படாமல் விடுபட்ட இருளா் சமுதாயத்தினருக்கு தொகுதி எம்எல்ஏவும், பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பாஜக மாநில விவசாய அணித் தலைவா் ராமு, பழங்குடியினா் நலச் சங்கத் தலைவா் ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com