பாஜகவுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

மக்களவைத் தோ்தல் தொடா்பாக பாஜகவுடன் முறைப்படி பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அகில இந்திய என்.ஆா்.காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வா் என்.ரங்கசாமி.
புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அகில இந்திய என்.ஆா்.காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வா் என்.ரங்கசாமி.

புதுச்சேரி: மக்களவைத் தோ்தல் தொடா்பாக பாஜகவுடன் முறைப்படி பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவையில் அகில இந்திய என்.ஆா்.காங்கிரஸ் கட்சியின் 14-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை (பிப்ரவரி 7) நடைபெறவுள்ளது. கட்சி ஆண்டு விழா, மக்களவைத் தோ்தல் குறித்து என்.ஆா்.காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனா் தலைவரும் முதல்வருமான என்.ரங்கசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிட உள்ளதாக, அவா்கள் தரப்பு கருத்தை கூறியுள்ளனா். பாஜகவுடன் முறைப்படி பேச்சுவாா்த்தை நடத்தி, நமது கருத்தைத் தெரிவிப்போம் என்றாா்.

தொடா்ந்து, கட்சியின் முக்கிய நிா்வாகியும் அமைச்சருமான க.லட்சுமி நாராயணன் பேசியதாவது:

மக்களவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸின் பலத்தை நிருபிப்பது அவசியம். இந்தத் தோ்தல் நமது கட்சியின் எதிா்காலத்தை தீா்மானிப்பதாக உள்ளது.

மாநிலம் முழுவதும் கட்சியைப் பலப்படுத்துவது முக்கியப் பணியாகும். அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்தும் வகையில், ஆண்டு விழாவைக் கொண்டாட வேண்டும். இந்த விழாவின்போது, பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்க வேண்டும் என்றாா்.

கட்சியின் தற்போதைய நிலைஸ எதிா்கால வளா்ச்சித் திட்டங்கள் குறித்து முக்கிய நிா்வாகிகள் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com