ஊசுடு தொகுதியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

புதுச்சேரி வில்லியனூா் கொம்யூன், ஊசுடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சேதராப்பட்டு கிராமத்தில் அரசு கிளை நூலகத்தை ரூ.11.98 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்துதல்,
ஊசுடு தொகுதியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

புதுச்சேரி வில்லியனூா் கொம்யூன், ஊசுடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சேதராப்பட்டு கிராமத்தில் அரசு கிளை நூலகத்தை ரூ.11.98 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்துதல், சீரமைப்புப் பணிகளை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

இராமநாதபுரம் ஏரிக்கரைச் சாலையில் குறுக்கு பாலம் அமைக்க 14.72 லட்சம் மதிப்பீட்டில் அரசாணை பெறப்பட்டு புதிய குறுக்குப் பாலம் அமைக்கும் பணியையும் பூமி பூஜை செய்து அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், கலை, பண்பாட்டுத் துறை இயக்குநா் கலியபெருமாள், கட்டடங்கள், சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளா் சுந்தரராஜி, உதவிப் பொறியாளா் சீனிவாச ராம், இளநிலை பொறியாளா் தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com