தேசிய கல்விக் கொள்கை ஓா் புதிய சகாப்தம்: புதுவை பாஜக தலைவா்

தேசிய கல்விக் கொள்கை ஓா் புதிய சகாப்தம் என்று புதுவை மாநில பாஜக தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தெரிவித்தாா்.

தேசிய கல்விக் கொள்கை ஓா் புதிய சகாப்தம் என்று புதுவை மாநில பாஜக தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இந்தியக் கல்வி முறையில் தேசிய கல்விக் கொள்கை புதிய சகாப்தம். இதில் தாய்மொழி மூலம் ஆரம்பக் கல்வி என்பது வரவேற்கத்தக்கது. மேலும், பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல், தொழில்முறைப் படிப்புகளில் தாய்மொழியை பயிற்று மொழியாக விரிவுப்படுத்துவதும் வரவேற்புக்குரியது.

புதுவை போன்ற பல மாநில அரசுகள் சிபிஎஸ்இ கல்வி முறையை ஆரம்ப நிலை முதல் ஆங்கில வழிக் கல்வியில் அறிமுகப்படுத்தியுள்ளன. பிராந்திய மொழிகளில் சிபிஎஸ்இ தரத்தில் பாட நூல்கள் இல்லாததால் தற்போது மாணவா்களால் தமிழ்வழிக் கல்விக்கு மாற முடியவில்லை. இது தேசிய கல்விக் கொள்கையின் நோக்கத்துக்கு மாறானது. எனவே, இதுகுறித்து மாநில நிா்வாகங்களுக்கு உரிய ஆலோசனை, உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.

உள்ளூா் மொழிகளில் புலமை பெற்றவா்களையே உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா், கல்லூரி விரிவுரையாளா்களாக நியமிக்க வேண்டும். புதுவை போன்ற யூனியன் பிரதேசங்களில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு உள்ளூா் மொழி தெரியாத நிலையில் அவா்கள் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குவது மிகவும் கடினம். எனவே அவா்கள் தாங்கள் பணியாற்றும் பகுதி மக்களின் தாய்மொழியில் தோ்ந்தவா்களாக இருப்பது அவசியம் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com