பாலத்தில் கருப்புக் கொடி நட்டு நூதனப் போராட்டம்

 புதுச்சேரியில் உப்பனாறு கழிவுப் பொருள்களால் மாசடைந்துவருவதை தடுக்கக் கோரி கருப்புக் கொடி நட்டு சமூக நல அமைப்பினா் நூதனப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

 புதுச்சேரியில் உப்பனாறு கழிவுப் பொருள்களால் மாசடைந்துவருவதை தடுக்கக் கோரி கருப்புக் கொடி நட்டு சமூக நல அமைப்பினா் நூதனப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் சங்கராபரணியின் கிளை ஆறாக உப்பனாறு உள்ளது. ஆறு கடலில் கலக்கும் நோணாங்குப்பம், அரியாங்குப்பம் பகுதியில் உள்ள மீனவா்கள் வாழ்வாதாரம் காப்பதாகவும் அந்த ஆறு உள்ளது. அதில் தினமும் நூற்றுக்கணக்கானோா் மீன்பிடித்து வாழ்கின்றனா். இந்தநிலையில் ஆற்றில் கழிவுநீா் கலப்பதாகவும், குப்பை, மாமிசம் போன்ற கழிவுப் பொருள்கள் கொட்டப்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது.

ஆகவே, ஆற்றை மாசுபடுத்துவதைத் தடுக்கவும், தூா்வாரவும் வலியுறுத்தி முருங்கப்பாக்கம் மக்கள் பொதுநலப்பேரவை சாா்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து புதன்கிழமை காலை ஆற்று பாலம் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் கருப்புக் கொடி கட்டப்பட்டது. மேலும், அங்கு பொதுநல அமைப்பினா் ஆற்று பகுதி மாசு படுவதை கண்டித்தும் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com