கேஸ் விநியோக நிறுவனத்தில்ரூ.9 லட்சம் திருட்டு

 புதுச்சேரியில் தனியாா் எரிவாயு விநியோக நிறுவனத்தில் ரூ.9 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

புதுச்சேரியில் தனியாா் எரிவாயு விநியோக நிறுவனத்தில் ரூ.9 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம்-மூலகுளம் சந்திப்பில் முன்னாள் அமைச்சா் ஒருவருக்குச் சொந்தமான எரிவாயு உருளை விநியோக நிறுவனம் உள்ளது. ஊழியா்கள் புதன்கிழமை இரவு நிறுவனத்தைப் பூட்டி விட்டுச் சென்றனா்.

பின்னா் வியாழக்கிழமை வந்த போது, இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 9 லட்சம் திருடப்பட்டது தெரிய வந்தது.

தகவலறிந்த ரெட்டியாா்பாளையம் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு கடையில் திருட்டு: ரெட்டியாா்பாளையத்தில் புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் உள்ள பாத்திரக் கடையிலும் இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ.80 ஆயிரம் திருடப்பட்டது குறித்தும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில், காரில் வந்த 3 போ் கடைகளின் கதவுகளை சேதப்படுத்தி திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com