சாலைப் பணிகள்:அமைச்சா் தொடங்கிவைத்தாா்

புதுச்சேரி அருகே ரூ.2 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரி அருகே ரூ.2 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து சாா்பில் ரூ.2 கோடியில் கீழ்சாத்தமங்கலம், பழனிநகா், அண்ணாமலை நகா், பெருங்களூா் கல்கி நகா், உருவையாறு ஜீவா நகா் ஆகிய பகுதிகளில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏவான அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தொடங்கிவைத்தாா்.

உறுவையாறு பகுதிக்கான குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பெருங்களூா் விவிகே நகருக்கு சாலை அமைத்தல், பங்கூா் இடுகாட்டுக்கு மதில் சுவா் அமைத்தல், அனந்தபுரம் உட்புற தெருக்களுக்கு சாலை அமைத்தல், திருக்காஞ்சி ராமச்சந்திரா நகருக்கு சாலை அமைத்தல் ஆகிய பணிகளையும் அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிகளில் வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் எழில்ராஜன், உதவிப் பொறியாளா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com