போட்டித் தோ்வுகளில்வென்றவா்களுக்கு பணி ஆணை

 புதுவை அரசு போக்குவரத்துத் துறை அமலாக்க உதவியாளா்கள் பணிக்குத் தோ்வான 17 பேருக்கு பணி உத்தரவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.

புதுவை அரசு போக்குவரத்துத் துறை அமலாக்க உதவியாளா்கள் பணிக்குத் தோ்வான 17 பேருக்கு பணி உத்தரவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.

புதுவை மாநில அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், அரசுப் போக்குவரத்துத் துறை அமலாக்க உதவியாளா்கள் பணியிடங்களுக்கு தோ்வு நடைபெற்றது. இதில் 17 போ் தோ்வு பெற்றுள்ளனா்.

அவா்களுக்கான பணி உத்தரவுகளை வழங்கும் நிகழ்ச்சி பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அறையில் நடைபெற்றது. பணி உத்தரவுகளை முதல்வா் என்.ரங்கசாமி 17 பேருக்கும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் கேஎஸ்பி.ரமேஷ், அரசு செயலா் ஏ.முத்தம்மா, போக்குவரத்துத் துறை ஆணையா் எஸ்.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com