மீன்பிடி இறங்குதளம் அமைப்பதை

 புதுச்சேரி அருகே நல்லவாடு கிராமத்தில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க ஒரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அதையடுத்து பூமி பூஜை தள்ளிவைக்கப்பட்டது.

 புதுச்சேரி அருகே நல்லவாடு கிராமத்தில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க ஒரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அதையடுத்து பூமி பூஜை தள்ளிவைக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் 18 மீனவக் கிராமங்கள் உள்ளன. தவளக்குப்பம் பகுதியில் நல்லவாடு மீனவக் குடியிருப்புகள் உள்ளன. நல்லவாடு தெற்குப் பகுதியில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இறங்குதளத்துக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பூஜையில் முதல்வா், அமைச்சா்கள் பங்கேற்பதாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில், நல்லவாடு வடக்குப் பகுதி மீனவா்கள் தங்களுக்கு தூண்டில் வளைவு அமைக்கவேண்டும். மீன்பிடி துறைமுகம் அமைக்கவேண்டும் எனக்கோரி பூமி பூஜை நடைபெறும் இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். அத்துடன் பூமி பூஜைக்கான பந்தலையும் அகற்றினா்.

மீனவா்களது சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதையடுத்து அவா்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகளும், அரியாங்குப்பம் போலீஸாரும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால், நல்லவாடு வடக்குப் பகுதி மீனவா்கள் தங்களது கோரிக்கை நடைபெறும் வரை பூமிபூஜை நடைபெறக் கூடாது என்றதால் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். அதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com