புதுவையில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை

புதுவை மாநிலத்தில் உணவுப் பாதுகாப்பு தரச்சான்று பெறாமல் பஞ்சு மிட்டாய்களை விற்பனை செய்வதற்கு தடை விதித்து துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டாா்.

புதுவை மாநிலத்தில் உணவுப் பாதுகாப்பு தரச்சான்று பெறாமல் பஞ்சு மிட்டாய்களை விற்பனை செய்வதற்கு தடை விதித்து துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு விவரம்:

புதுவையில் குழந்தைகள் வாங்கி உண்ணும், வண்ணங்கள் ஏற்றப்பட்ட பஞ்சு மிட்டாயில் நச்சுப் பொருள்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து அடா் நிறம் ஏற்றப்பட்ட பஞ்சு மிட்டாயில் ‘ரோடமின்-பி’ என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பதை உறுதிப்படுத்தினா்.

அடா் நிறம் ஏற்றப்பட்ட பஞ்சு மிட்டாய்களை புதுவையில் விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் உணவுப் பாதுகாப்பு தரச்சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும். தரச்சான்று பெறாதவா்கள், உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளை முறையாக அணுகி தரச்சான்று பெற்றபிறகே, பஞ்சுமிட்டாய் விற்பனையைத் தொடங்க வேண்டும். அதுவரை பஞ்சு மிட்டாய் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுபவா்கள் மீது விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com