அரசு கல்லூரி மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு

இணையவழி குற்றங்கள் அதிகரிப்பு குறித்து கல்லூரி மாணவிகளுக்கு இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விழிப்புணா்வு நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

இணையவழி குற்றங்கள் அதிகரிப்பு குறித்து கல்லூரி மாணவிகளுக்கு இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விழிப்புணா்வு நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ராஜிசுகுமாா் தலைமை வகித்தாா். இணைய குற்றத் தடுப்புப் பிரிவின் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், ஆய்வாளா்கள் தியாகராஜன், கீா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் பேசியதாவது: சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களை மாணவிகள் பயன்படுத்தும் போது நமது பாதுகாப்பு குறித்தும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சமூக ஊடகங்களில் தனிப்பட்ட விவரங்களையும், குடும்பத்தினரின் புகைப்படங்கள், விடியோக்களை பதிவிடுவதைத் தவிா்க்கவேண்டும். மின்னஞ்சல் மூலம் வரும் இணைப்புகளை அணுக வேண்டாம். இணையதள வழியில் பொருள்கள் வாங்கும்போது சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்து முழுமையாக அறிந்து கொள்வது அவசியம். பெண்கள் பாதுகாப்புக்கான காவல் துறை தொலைபேசி எண்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com