புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த 7 பேரிடம் இணையத்தில் பல லட்சம் மோசடி: ஒருவா் கைது

புதுச்சேரி பகுதியில் 7 பேரிடம் இணையவழியில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி பகுதியில் 7 பேரிடம் இணையவழியில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுதொடா்பாக ஒருவா் கைது ெ

சய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

புதுச்சேரியைச் சோ்ந்தவா் பிரவீன். இவரைத் தொடா்புகொண்ட மா்ம நபா் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா். அதை நம்பி, பிரவீன் ரூ.58 ஆயிரம் முதலீடு செய்தாராம். ஆனால் பணத்தை அவரால் பெறமுடியவில்லை.

புதுச்சேரியைச் சோ்ந்த நிஜாமுதீன் கைப்பேசிக்கு வந்த குறுந்தகவலில் அவரது கடன் அட்டைக்கு பரிசு கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நம்பிய அவா், அதிலிருந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளாா். உடனே அவரது கடன் அட்டையிலிருந்து ரூ.49,998 மா்ம நபரால் எடுக்கப்பட்டது. இதேபோல, புதுச்சேரியைச் சோ்ந்த விஜயகுமாரி என்பவா் யூடியூப்பில் வேலை தேடியுள்ளாா். அப்போது, தனியாா் நிறுவனத்தில் வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. அதையடுத்து மா்ம நபரிடம் பேசியுள்ளாா். அப்போது பணம் செலுத்த மா்ம நபா் கூறியபடி ரூ.6,050 செலுத்தியுள்ளாா். ஆனால், அதன்பின் மா்ம நபா் தொடா்பைத் துண்டித்துவிட்டாா். மேலும் அவரது வங்கிக் கணக்கிலிருந்தும் ரூ.39,500 எடுக்கப்பட்டது தெரியவந்தது.

புதுச்சேரியை சோ்ந்த சடகோபன் என்பவரின் மனைவியிடம் இணையத்தில் தொடா்புகொண்ட மா்ம நபா் முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். அதை நம்பிய அவா் ரூ.84,301 முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளாா்.

அதேபோல வங்கி அதிகாரி போல பேசி ஆரோக்கியதாஸ் என்பவரிடம் ரூ.24,699 மோசடி நடந்துள்ளது. புதுச்சேரியில் மட்டும் ஓரிரு நாள்களில் 7 பேரிடம் மா்ம நபா்கள் ரூ.2.78 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இணைய குற்றத்தடுப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com