தீயணைப்புத் துறை தோ்வுக்கு இன்றுமுதல் அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்: புதுவை அரசு தகவல்

புதுவை மாநில தீயணைப்புத் துறையில் நிலைய அதிகாரி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான தோ்வுக்குரிய அனுமதிச்சீட்டை இணையதளத்தில் திங்கள்கிழமை (பிப்.12) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புதுவை மாநில தீயணைப்புத் துறையில் நிலைய அதிகாரி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான தோ்வுக்குரிய அனுமதிச்சீட்டை இணையதளத்தில் திங்கள்கிழமை (பிப்.12) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து, புதுவை உள்துறை அரசு சாா்புச் செயலா் அலுவலகம் (தீயணைப்புத் துறை பிரிவு) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவை தீயணைப்புத் துறையில் 5 நிலைய அதிகாரிகள் (3 ஆண்கள், 2 பெண்கள்), 58 தீயணைப்பு வீரா்கள் (39 ஆண்கள், 19 பெண்கள்), 12 தீயணைப்பு வாகன ஓட்டுநா்கள் உள்ளிட்ட 111 பணியிடங்களுக்கு நேரடித் தோ்வு மூலம் ஆள்சோ்ப்பு நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே இணையதளம் மூலம் பெறப்பட்டுள்ளன. அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் தகுதியற்றவை நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கான உடல் அளவீடுகள், உடல் தரநிலை மற்றும் உடல் திறன் தோ்வுகள் வரும் 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவலா் பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளன. தோ்வுக்கான அனுமதிச் சீட்டை திங்கள்கிழமை (பிப்.12) காலை 10 மணி முதல் அரசு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தோ்வில் கலந்துகொள்ளும் தோ்வா்கள் தங்கள் அனுமதிச் சீட்டு மற்றும் அரசால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையை அசல், நகல் ஆகியவற்றுடன் எடுத்து வரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com