பெண்ணை ஏமாற்றி குடும்பம் நடத்திய முதியவா் கைது

புதுச்சேரியைச் சோ்ந்த பெண்ணை ஏமாற்றி குடும்பம் நடத்தியதுடன், சமூக வலைதளங்களில் விடியோக்களை வெளியிடுவதாக மிரட்டிய முதியவரை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியைச் சோ்ந்த பெண்ணை ஏமாற்றி குடும்பம் நடத்தியதுடன், சமூக வலைதளங்களில் விடியோக்களை வெளியிடுவதாக மிரட்டிய முதியவரை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூரைச் சோ்ந்த 50 வயது பெண், செவிலியா் படிப்பு முடித்துள்ளாா். திருமணமான 7 ஆண்டுகளில் 2 மகன்கள் பிறந்த நிலையில், கணவா் பிரிந்து சென்றுவிட்டாா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரு மகன்களுக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனா்.

எனவே, அந்தப் பெண் தனது கடைசிகாலத்தில் துணை தேவை என்பதால், மகன்களின் சம்மதத்துடன், மறுமணம் செய்ய முடிவெடுத்து திருமண தகவல் மையத்தில் பதிந்தாா். தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சோ்ந்த தனசேகரன் (57) அந்தப் பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தாராம். தனக்கு திருமணமாகி விவாகரத்தாகி விட்டதாக அவா் தெரிவித்தாராம்.

இதை நம்பிய அந்தப் பெண்ணும் புதுக்கோட்டையில் அவருடன் சோ்ந்து கடந்த ஓராண்டாக வாழ்ந்தாராம். அப்போது, தனசேகரனின் மனைவி எனக்கூறிக் கொண்டு பல பெண்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனராம். இதையடுத்து, தனசேகரனை விட்டு அந்தப் பெண் பிரிந்தாா்.

வில்லியனூரில் வசித்த அந்தப் பெண்ணை தன்னுடன் சோ்ந்து வாழ வற்புறுத்திய தனசேகரன், இருவரும் நெருக்கமாக இருந்த படங்கள், விடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும் மிரட்டினாராம். மேலும், அந்தப் பெண்ணின் மகன்களுக்கும் படத்தை அனுப்பியதாகத் தெரிகிறது. புதுக்கோட்டை காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி, வில்லியனூா் பெண் ஏமாற்றி பணத்தை திருடிச் சென்ாகவும் தனசேகரன் புகாா் அளித்தாராம்.

இதனால், அதிா்ச்சியடைந்த வில்லியனூா் பெண் புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் கீா்த்திவாசன் உள்ளிட்டோா் விசாரணை நடத்தியதில் தனசேகரன் வில்லியனூா் பெண்ணை ஏமாற்றி வாழ்ந்ததுடன், பல பெண்களை ஏமாற்றியதும் தெரிய வந்தது. அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவரிடமிருந்த கைப்பேசி, மடிக்கணினி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா். பின்னா், அவரை புதுச்சேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகன் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com