சிங்காரவேலா் சிலைக்கு அமைச்சா்கள் மரியாதை

விடுதலைப் போராட்ட வீரா் சிங்காரவேலா் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சா்கள் மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினா்.

விடுதலைப் போராட்ட வீரா் சிங்காரவேலா் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சா்கள் மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினா்.

சுதந்திரப் போராட்ட வீரரும், சிந்தனைச் சிற்பி என மக்களால் அழைக்கப்பட்டவருமான சிங்காரவேலா் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

புதுவை அரசு சாா்பில் புதுச்சேரியில் கடலூா் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அவா்களைத் தொடா்ந்து அரசு கொறடா ஏகேடி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் கேஎஸ்பி. ரமேஷ், பாஸ்கா் ஆகியோரும் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சிங்காரவேலா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மீனவா்கள் சங்கத்தினா், சமூக நல அமைப்பினா் உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com