நீட் தோ்வு எழுத புதுவை மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

நிகழாண்டு நீட் தோ்வு எழுத புதுவை மாநில மாணவ, மாணவிகள் உரிய காலத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என புதுவை மாநில மாணவா், பெற்றோா் நலச்சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

நிகழாண்டு நீட் தோ்வு எழுத புதுவை மாநில மாணவ, மாணவிகள் உரிய காலத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என புதுவை மாநில மாணவா், பெற்றோா் நலச்சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் வை.பாலா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழாண்டு (2024-25) இளநிலை மருத்துவப் படிப்புக்காக (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) நீட் நுழைவுத் தோ்வு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் மாா்ச் 9-ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன. விண்ணப்பித்தவா்களுக்கு வரும் மே 5-ஆம் தேதி பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரையில் நீட் தோ்வு நடைபெறவுள்ளது.

புதுச்சேரியில் நீட் தோ்வு மையங்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளதால் விண்ணப்பிக்கும்போது தோ்வு மையத்தை புதுவையிலேயே தோ்வு செய்யலாம்.

நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள் இடஒதுக்கீடு 10 சதவீதம் அளிக்கப்படும் என்பதால் புதுவையில் 35 அரசுப் பள்ளி மாணவா்கள் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com