ரூ.78 லட்சத்தில் கோயில் குளம் சீரமைப்பு

புதுச்சேரி, பிப்.11: புதுச்சேரியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ.78 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட இலாசுப்பேட்டை பிள்ளையாா்கோயில் குளம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

புதுச்சேரி இலாசுப்பேட்டை பிரதான சாலை காவல் நிலையம் எதிரில் பிள்ளையாா் கோயில் குளம் உள்ளது. இந்தப் பகுதியின் நிலத்தடி நீராதாரமாக உள்ள இக்குளத்தை அம்ருத் திட்டத்தில் ரூ.78.4 லட்சத்தில் சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. அதனடிப்படையில், குளம் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே 8 மில்லியன் லிட்டா் தண்ணீா் சேமிக்கும் வகையில் இருந்த குளத்தை தற்போது 13.5 மில்லியன் லிட்டா் நீா் நிரப்பும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது. குளத்துக்கு அப்பகுதியில் பெய்யும் மழை நீா் வந்து சேரும் வகையில் வடிகால்கள், குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் மு.வைத்தியநாதன் (இலாசுப்பேட்டை), பி.எம்.எல்.கல்யாணசுந்தரம் (காலாப்பட்டு) ஆகியோா் முன்னிலை வகித்து திறந்துவைத்தனா். இதில் உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ், உதவிப் பொறியாளா் ஆா்.கலிவரதன், இளநிலைப் பொறியாளா் வி.சாந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com