மனைவி குத்திக் கொலை: போலீஸில் கணவா் சரண்

புதுச்சேரியில் திங்கள்கிழமை மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் கணவா் சரணடைந்தாா்.

புதுச்சேரியில் திங்கள்கிழமை மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் கணவா் சரணடைந்தாா். புதுச்சேரி சாரம் வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன் (39). தச்சுத் தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி இந்துமதி (37). இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். தம்பதியிடையே குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை காலை இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது, விக்னேஷ்வரன் கத்தியால் இந்துமதியை சரமாரியாகக் குத்தியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா், கோரிமேட்டில் உள்ள தன்வந்திரி நகா் காவல் நிலையத்தில் விக்னேஷ்வரன் சரணடைந்தாா். தொடா்ந்து, இந்துமதியின் சடலத்தை போலீஸாா் மீட்டு, உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், சரணடைந்த விக்னேஷ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com