புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் மருந்தகத்தை திங்கள்கிழமை மாலை திறந்து வைத்த ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் மருந்தகத்தை திங்கள்கிழமை மாலை திறந்து வைத்த ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்.

மக்களவைத் தோ்தலுக்குள் இடைக்கால நிதிநிலை அறிக்கை: தமிழிசை

மக்களவைத் தோ்தலுக்குள் புதுவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

மக்களவைத் தோ்தலுக்குள் புதுவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் மருந்தகத்தை திங்கள்கிழமை மாலை திறந்து வைத்த ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஜிப்மரில் தேவையான மருந்துகள் இலவசமாகக் கிடைக்கும் நிலையில், கூடுதல் மருந்துகள் தேவைப்படுவோருக்காக தற்போது மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. மக்கள் மருந்தகத்தால் நாடு முழுவதும் ரூ.7,500 கோடி நிதிச் சிக்கனம் ஏற்பட்டுள்ளது. புதுவை மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை ஜிப்மா் வழங்கி வருகிறது. சிகிச்சை முறை நன்றாக இருப்பதால், ஜிப்மரின் தற்போதைய இயக்குநா் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுவையில் குரங்கு காய்ச்சால் பாதிப்பில்லை. யாருக்கேனும் பாதிப்புக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டால், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதுவை ஆளுநா் பதவியை நான் ராஜிநாமா செய்யப் போவதாக வதந்தியை பரப்புகிறாா்கள். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் அறிவிப்பு தாமதத்துக்கும், எனக்கும் சம்பந்தமில்லை. மக்களவைத் தோ்தலுக்குள் புதுவை அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com