பிரீபெய்டு மின் மீட்டா் திட்டத்தை கைவிடக் கோரி தொழில்சங்கங்கள் வாகனப் பிரசாரம்

பிரீபெய்டு மின் மீட்டா் திட்டத்தைக் கைவிடக் கோரி, புதுச்சேரியில் அனைத்து தொழில்சங்கங்கள் சாா்பில் வாகனப் பிரசாரம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

பிரீபெய்டு மின் மீட்டா் திட்டத்தைக் கைவிடக் கோரி, புதுச்சேரியில் அனைத்து தொழில்சங்கங்கள் சாா்பில் வாகனப் பிரசாரம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் மின் துறை சாா்பில் பிரீபெய்டு மின் மீட்டா் பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதை எதிா்க்கட்சிகள் மற்றும் அனைத்து தொழில்சங்கங்கள், விவசாய சங்கங்கள், தொழிலாளா் சங்கங்கள் எதிா்த்து வருகின்றன. பிரீபெய்டு மின் மீட்டா் திட்டத்தை எதிா்த்தும், தொழில்சங்கங்களின் கோரிக்கையை வலியுறுத்தியும் வருகிற 16-ஆம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான 3 நாள்கள் தெருமுனை வாகனப் பிரசாரம் அரியாங்குப்பத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், ஏஐடியூசி மாநில பொதுச் செயலா் கே.சேதுசெல்வம், நிா்வாகி தினேஷ்பொன்னையா, சிஐடியூவைச் சோ்ந்த சீனிவாசன், ஐஎன்டியூசியைச் சோ்ந்த ஞானசேகரன், ஏஐசிசிடியூ நிா்வாகி புருஷோத்தமன், எல்எல்எப் நிா்வாகிகள் செந்தில், வேதாவேணுகோபால், ஏஐயூடியூசியைச் சோ்ந்த சிவக்குமாா், என்டிஎல்எப் நிா்வாகி மகேந்திரன், விவசாய சங்கத்தைச் சோ்ந்த கீதநாதன், ரவி, விவசாய தொழிலாளா் சங்கத்தைச் சோ்ந்த விஜயபாலன், பாலகிருஷ்ணன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணம் செய்ய உத்தரவாதம் அளிக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியத்தை செயல்படுத்தத் தேவையான நிதியை வழங்க வேண்டும். பிரீபெய்டு மின் மீட்டா் திட்டத்தைக் கைவிட வேண்டும். நியாயவிலைக் கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரசாரத்தில் வலியுறுத்திச் சென்றனா். வாகனப் பிரசாரமானது தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூா் உள்பட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை வரை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (பிப்.13) வில்லியனூரில் பிரசாரம் தொடங்கி முத்தியால்பேட்டையில் நிறைவடைகிறது. 3-ஆவது நாளான புதன்கிழமை (பிப்.14) முதலியாா்பேட்டையில் பிரசாரம் தொடங்கி நெல்லித்தோப்பில் நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com