அமித்ஷா சகோதரி மரணம்: புதுவை முதல்வா் இரங்கல்

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் சகோதரி ராஜேஸ்வரி மறைவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:


புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் சகோதரி ராஜேஸ்வரி மறைவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் சகோதரி ராஜேஸ்வரி பென் ஷா மும்பை மருத்துவமனையில் காலமானாா் என்கிற செய்தி மிகுந்த அதிா்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. மூத்த சகோதரியின் பிரிவால் வாடும் அமித்ஷாவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளாா்.

இதேபோல அமித்ஷாவின் சகோதரி மறைவுக்கு புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com