பராமரிப்புக் கொடை பெற புதுவை மாநிலகலாசாரக் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்

புதுவை மாநிலத்தைச் சோ்ந்த இலக்கிய, கலாசார குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் பராமரிப்புக் கொடை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலை, பண்பாட்டுத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி: புதுவை மாநிலத்தைச் சோ்ந்த இலக்கிய, கலாசார குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் பராமரிப்புக் கொடை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலை, பண்பாட்டுத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, கலை, பண்பாட்டு இயக்குநா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை அரசு கலை, பண்பாட்டுத் துறையில் நடைமுறையில் உள்ள இலக்கிய, கலாசார மற்றும் நாடகக் குழுக்கள், நிறுவனங்களுக்கு பராமரிப்புக் கொடை அளிப்பதற்கான திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய அரசின் நிறுவனங்களின் பதிவாளா் அலுவலகத்தில் பதிவு பெற்று, புதுப்பிக்கப்பட்ட கலாசார நிறுவனங்கள், குழுக்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளின் நகலை விண்ணப்பத்துடன் சமா்ப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை ஏஆா்டி.பிஒய்.ஜிஓவி.ஐஎன் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை 9.2.2024-க்குள் புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதி, எண்.1 இல் செயல்படும் கலை, பண்பாட்டுத் துறை இயக்ககத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com