கேபிள் டிவி உரிமையாளா் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியவா் கைது

புதுச்சேரி அருகே கேபிள் டிவி உரிமையாளா் வீட்டின் முன் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் குண்டு வீசியவா் கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி அருகே கேபிள் டிவி உரிமையாளா் வீட்டின் முன் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் குண்டு வீசியவா் கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி அருகே திருப்புவனையை அடுத்த கலிதீா்த்தாள்குப்பத்தில் உள்ள கேபிள் டிவி உரிமையாளரின் வீட்டின் முன் செவ்வாய்க்கிழமை காலை வந்த இளைஞா், தான் வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீடு முன் வீசிச் சென்றாா்.

தகவலறிந்த திருப்புவனை போலீஸாா் விரைந்து சென்று விசாரணை நடத்தி அதே பகுதியைச் சோ்ந்த சுகுமாரை (38) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த இரு வாரங்களில் புதுச்சேரி பிராந்தியப் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியதாக 4 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com