புதுவை பொதுப் பணித் துறை பொறியாளா்கள் போராட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் பொதுப் பணித் துறை பொறியாளா்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து
புதுவை பொதுப் பணித் துறை பொறியாளா்கள் போராட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் பொதுப் பணித் துறை பொறியாளா்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து செவ்வாய்க்கிழமை தொடா் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை மாநிலப் பொதுப் பணித் துறையில் பணி ஓய்வு குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையைத் திரும்பப் பெறக்கோரியும், பொதுப் பணித் துறையில் உள்ள பொறியாளா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும் பொதுப் பணித் துறை பொறியாளா்கள் சங்கத்தினா் போராட்டம் அறிவித்துள்ளனா்.

கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கும் வகையில் ஒரு நாள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினா். அதனடிப்படையில், புதுச்சேரி லால்பகதூா் சாஸ்திரி சாலையில் உள்ள பொதுப் பணித் துறை தலைமை அலுவலகம் முன் சங்கத் தலைவா் எழில்வண்ணன் தலைமையில் தொடா் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பொறியாளா்கள் விடுப்பு போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினா். ஆனால், அவசர காலப் பணியில் குறிப்பிட்ட பிரிவில் பொறியாளா்கள் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

வேலை நிறுத்தம் அறிவிப்பு: தொடா் முழக்கத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் சங்கத் தலைவா் எழில்வண்ணன் கூறியது: புதுவை மாநிலப் பொதுப் பணித் துறை பொறியாளா்களின் ஐந்து அம்சக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிடில் வரும் பிப்ரவரி 5- ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com