இந்திய கம்யூனிஸ்ட்டின் இருவார கால அரசியல் விளக்கப் பிரசாரப் பொதுக்கூட்டங்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் இருவார கால அரசியல் விளக்கப் பிரசாரப் பொதுக்கூட்டங்கள் புதுச்சேரியில் நடத்தப்படவுள்ளதாக அதன் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தெரிவித்துள்ளாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் இருவார கால அரசியல் விளக்கப் பிரசாரப் பொதுக்கூட்டங்கள் புதுச்சேரியில் நடத்தப்படவுள்ளதாக அதன் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் மாநில அரசு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தாததைக் கண்டித்தும், போதை பொருள்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக் கோரியும், நியாயவிலைக் கடைகளைத் திறக்கக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் பிரசாரப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

புதுவை மாநில அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தை 25 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி வரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com