புதுச்சேரியில் குடியரசுத் தின விழா அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் காவல்துறையினா் அணிவகுப்பு ஒத்திகையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் குடியரசுத் தின விழா அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் காவல்துறையினா் அணிவகுப்பு ஒத்திகையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

நாடெங்கும் குடியரசுத் தின விழா 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அன்று கடற்கரை காந்தி சிலை திடலில் தேசியக் கொடி ஏற்றப்படவுள்ளது. அப்போது காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் காவல்துறையினா், ஊா்க்காவல் படையினா், சிறப்பு பாதுகாப்புப் படையினா், கடலோரக் காவல் படையினா், தீயணைப்புத் துறை, தேசிய மாணவா் படை உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

கடற்கரை காந்தி சிலை முன் புதன்கிழமை காலையில் நடந்த அணிவகுப்பு ஒத்திகையில் முக்கிய விருந்தினா் போல ஒரு பெண்ணை நடக்கவிட்டு அவருக்கு காவல் துறையினா் மரியாதை செலுத்துவது போல அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

இதை, புதுச்சேரி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா.சைதன்யா, காவல் கண்காணிப்பாளா் சுவாதி சிங் உள்ளிட்டோா் மேற்பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com