புதுவையில் இந்திய கம்யூ. இருவார பிரசார பொதுக்கூட்டங்கள் இன்று தொடக்கம்

புதுவை மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இருவார பிரசாரப் பொதுக்கூட்டங்கள் இன்று தொடங்குகிறது.

புதுவை மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இருவார பிரசாரப் பொதுக்கூட்டங்கள் இன்று தொடங்குகிறது.

இது குறித்து, அக்கட்சியின் புதுவை மாநிலச் செயலா் அ.மு.சலீம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: புதுவை மாநில அரசு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தாததைக் கண்டித்தும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல், நியாயவிலைக் கடைகளைத் திறக்கக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் பிரசாரப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

புதுவை மாநில அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இந்த பிரசாரக் கூட்டங்களை வியாழக்கிழமை (ஜன. 25) முதல் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com