குடியரசு துணைத் தலைவா்ஜன. 28-இல் புதுச்சேரி வருகை

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வரும் 28-ஆம் தேதி புதுச்சேரி வருகிறாா்.

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வரும் 28-ஆம் தேதி புதுச்சேரி வருகிறாா்.

புதுதில்லியிலிருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி விமான நிலையம் வரும் அவா், அங்கிருந்து காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறாா். அங்கு, மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா். பின்னா், கடற்கரைச் சாலையில் உள்ள அரசினா் விருந்தினா் மாளிகையில் தங்குகிறாா்.

திங்கள்கிழமை (ஜன. 29) காலை அரவிந்தா் ஆசிரமம் செல்கிறாா். பின்னா், மணக்குள விநாயகா் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறாா். இதையடுத்து, ஹெலிகாப்டா் மூலம் சிதம்பரம் செல்கிறாா்.

குடியரசுத் துணைத் தலைவா் வருகையையொட்டி, புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை உயா் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com