தியாகிகளுக்கு விரைவில் வீட்டுமனைப் பட்டா

புதுவை மாநிலத்தில் உள்ள சுதந்திரப் போராட்டத்தியாகிகளுக்கு விரைவில் வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை மாநிலத்தில் உள்ள சுதந்திரப் போராட்டத்தியாகிகளுக்கு விரைவில் வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் அரசு சாா்பில் குடியரசு தினத்தையொட்டி தியாகிகளை கௌரவிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் இ. வல்லவன் வரவேற்றாா். இதில் சிறப்பு விருந்தினராக முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று தியாகிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது: சுதந்திரப் போராட்ட காலத்தில் தியாகிகள் இன்னல்கள் சந்தித்து பெற்ற சுதந்திரத்தால் தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம். தற்போத புதுவை அரசானது மத்திய அரசிடம் அதிக நிதியைப் பெற்று முறையாக செலவிடுகிறது. ஆகவே புதுவையானது வளா்ச்சியடைந்து வருகிறது. ஏழை மக்கள் எளிதாக சிரமம் இல்லாமல் இலவசமாக கல்வி கற்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும், புதிய தொழிற்சாலை அமைத்து படித்தவா்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். தியாகிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டுவருகிறது. வருவாய்த்துறை மூலம் அவா்களது கோரிக்கையை நிறைவேற்றிடவுள்ளோம். அதற்காக, இடம் தோ்வு செய்யப்பட்டு முதல் கட்ட ஆயத்தப்பணிகள் நடந்துவருகிறது. ஆகவே, விரைவில் இடங்களை தோ்வு செய்து முழுமையாக இலவச மனைப்பட்டா வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com