பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: 129 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி ஒதுக்கீடு

மணவெளித் தொகுதியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கான நிதி ஒதுக்கீடு அரசாணையைப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா்.

மணவெளித் தொகுதியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கான நிதி ஒதுக்கீடு அரசாணையைப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா்.

புதுவை அரசின் குடிசைமாற்று வாரியம் மூலம் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, வீடு கட்டுவதற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி மணவெளி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தவளக்குப்பத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கலந்துகொண்டு 129 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.57 கோடிக்கான வீடுகட்டும் நிதி ஒதுக்கீடு அரசாணைகளை வழங்கினாா்.

இதில், பயனாளிகளில் 89 பேருக்கு முதல் தவணையாக தலா ரூ.1.20 லட்சமும், இரண்டாவது தவணைப் பயனாளிகள் 14 பேருக்கு தலா ரூ.1.60 லட்சமும் வழங்கப்பட்டது. மூன்றாவது தவணையாக 26 பேருக்கும் அரசாணை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் குடிசை மாற்றுவாரிய இளநிலைப் பொறியாளா் பாஸ்கா், களப்பணியாளா் மில்கிதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com