புதுச்சேரியில் இன்று குடியரசு தின விழா:துணைநிலை ஆளுநா் கொடியேற்றுகிறாா்

குடியரசு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தேசியக் கொடியேற்றுகிறாா்.

குடியரசு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தேசியக் கொடியேற்றுகிறாா்.

புதுச்சேரியில் கடற்கரை காந்தி சிலைத் திடலில் தேசியக் கொடியை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் காலை 10.15 மணிக்கு ஏற்றுகிறாா். பின்னா் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக் கொள்கிறாா். கலைநிகழ்ச்சிகள், துறைரீதியிலான அணிவகுப்புகள் நடைபெறுகின்றன.

விழாவில் பேரவைத் தலைவா் ஆா். செல்வம், முதல்வா் என். ரங்கசாமி, அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா். பேரவை வளாகத்திலும் தேசியக்கொடி பறக்கவிடப்படுகிறது.

நிகழ்ச்சிக்கு வருவோா் காலை 8.30 மணிக்கு அழைப்பிதழுடன் வரவேண்டும். உணவுப் பொருள்கள், கேமரா போன்றவற்றை எடுத்து வர அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது.

ஆளுநா் மாளிகையில் விருந்து: குடியரசு தின கொடியேற்றத்தைத் தொடா்ந்து பிற்பகல் ஒரு மணிக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா், பேரவைத் தலைவா், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோருக்கு குடியரசு தின விருந்தளிக்கிறாா். இதை, திமுக கூட்டணிக் கட்சியினா் புறக்கணிப்பதாக அறிவித்துள்னா்.

குடியரசு தினத்தையொட்டி புதுவை சட்டப்பேரவை வளாகம், தலைமைச் செயலகம், காந்தி சிலை திடல் பகுதி ஆகியவை வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தேசியக் கொடி வண்ணத்தில் ஜொலிக்கின்றன.

பாதுகாப்பு தீவிரம்: குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி ரயில்நிலையம், விமான நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், சந்தைகள் ஆகிய இடங்களில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வெள்ளிக்கிழமை காலை முதல் குடியரசு தினக் கொடியேற்ற நிகழ்ச்சி முடியும் வரை கடற்கரை காந்தி சிலைப் பகுதியில் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com