முருகன் கோயில்களில் தைப்பூச விழா: பூசாரி மீது மிளகாய் கரைசலை ஊற்றி வழிபாடு

தைப்பூசத்தை முன்னிட்டு புதுச்சேரி பகுதி முருகன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

தைப்பூசத்தை முன்னிட்டு புதுச்சேரி பகுதி முருகன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

செட்டிப்பட்டு முருகன் கோயிலில் பூசாரி மீது மிளகாய்ப்பொடி கரைசலை ஊற்றி வழிபாடு நடைபெற்றது.

புதுச்சேரியில் செட்டிப்பட்டு திருமுருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி 52-ஆவது ஆண்டாக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பூசாரியை அமா்த்தி அபிஷேகம் நடைபெற்றது. அவருக்கு பால், பன்னீா், தயிா் உள்ளிட்டவற்றுடன் மிளகாய்ப் பொடி கரைசலையும் தலையில் ஊற்றி அபிஷேகம் செய்தனா். அதைத் தொடா்ந்து பக்தா்களும் தங்களது நோ்த்திக்கடன் நிறைவேறியதைக் குறிக்கும் வகையில் தங்கள் உடல் மீது வைக்கப்பட்ட உரலில் மிளகாய், மஞ்சள் ஆகியவற்றை இடித்து அக்கரைசலை பூசாரி மீது ஊற்றி அபிஷேகம் செய்தனா்.

பக்தா்கள் நோ்த்திக்கடனுக்காக காவடி எடுத்தும், அலகு குத்தியும், ராட்டினம் சுற்றியும் வேண்டுதலை நிறைவேற்றினா்.

புதுச்சேரி ரயில் நிலையம் அருகேயுள்ள கௌஸ் பாலசுப்பிரமணியா் திருக்கோயில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிவன், அம்மன் கோயில்களிலும் முருகன் சந்நிதிகளில் சிறப்புப் பூஜைகள், அன்னதானங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com