அனைத்து தொழிற்சங்கள் சாா்பில் பைக், டிராக்டா்கள் பேரணி

2-7-26pyp12a_2601chn_104
2-7-26pyp12a_2601chn_104

26பிஒய்பி12ஏ :

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கை பேரணியில் அணிவகுத்து சென்ற டிராக்டா்கள்.

புதுச்சேரி, ஜன. 26: புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் மோட்டாா் சைக்கிள்கள், டிராக்டா்கள் அணிவகுத்த வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் தொழிலாளா்கள், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், திமுக உள்ளிட்டவை குற்றஞ்சாட்டி வருகின்றன. எதிா்க்கட்சிகளின் தொழிற்சங்க அமைப்பினரும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை அறிவித்துள்ளனா்.

அதனடிப்படையில், கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில அனைத்து தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை டிராக்டா், மோட்டாா் சைக்கிள் பேரணி நடத்தினா்.

புதுச்சேரி நகரில் உள்ள கடலூா் சாலையில் தியாகிகள் சிலை சதுக்கத்திலிருந்து வாகனப் பேரணி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஏஐடியுசி மாநில பொதுச் செயலா் கே. சேதுசெல்வம், சிஐடியு மாநிலச் செயலா் சீனுவாசன், ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலா் ஞானசேகரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஏஐசிசிடியு பொதுச் செயலா் புருஷோத்தமன், எல்.எல்.எப். செயலா் செந்தில், என்.டி.எல்.எப். செயலா் மகேந்திரன், ஏஐயூடியுசி சிவக்குமாா், எம்.எல்.எப். செயலா் வேதா வேணுகோபால், விவசாயிகள் சங்கத் தலைவா்கள் கீதநாதன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பேரணியில் டிராக்டா்களிலும், இருசக்கர வாகனங்களிலும் ஏராளமான தொழிலாளா்கள், விவசாயிகள் பங்கேற்றனா். மறைமலை அடிகள் சாலை, நெல்லித்தோப்பு, இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சிலை, காமராஜா் சாலை, அண்ணா சாலை வழியாக சென்ற பேரணியானது சுதேசி ஆலை அருகில் நிறைவடைந்தது.

பேரணியில் வந்தவா்கள், வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.26 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். புதுவையில் அமைப்புசாரா தொழிலாளா் நலவாரித்தை நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். மின்துறையை தனியாா்மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

Image Caption

?????????????? ????????????? ?????? ????? ??????? ????????? ????????? ??????? ???????? ???? ??????????? ??????? ??????? ?????? ???????????.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com